வெள்ளி, 19 நவம்பர், 2010

மருத்துவ குறிப்பு

சளி தொந்தரவு க்கு   மிளகு சூப் ...
மிளகு பொடி 2  ஸ்பூன் ,சீரக பொடி 2  ஸ்பூன் , 4  பள்லு பூண்டு , ஒரு எலிமிச்சை பழம்
நீரினை கொதிக்க வைத்து  மிளகு,சீரக பொடி போட்டு கொதிக்க விடவும் ...பின்னர் இறக்கி வைத்து ..வடி கட்டி  எலுமிச்சை பிழிந்து சூடாக சாப்பிட சளி ,இருமல் மண்டை சளி ,தொந்தரவு நீங்கும்....  
    மேலும் வரும்.....

சமையல் கலை ...

சத்து மிகுந்த அடை.....
தேவை ..சதாரனமான தோசை மாவு  ... ஒரு லிட்டர் ... து பருப்பு ,க பருப்பு ,கொ கடலை ,பச்சை பட்டாணி ,சோயா பீன்ஸ் ,தலா  ஒரு கப் ,  மிளகாய் பொடி தேவை யான அளவுடன் ,மற்றும் . பெருங்காய பவுடர் ஒரு ஸ்பூன் ,தேவையான அளவு உப்பு ....      எண்ணெய் (நல்ல எண்ணெய் ருசி கூட்டும்)..
கடலை மற்றும் பருப்பு களை   6  மணி க்கு  ஊறவைக்கவும் ... அரைத்து எடுத்து (சற்று கொரகரப்பாக)மி பொடி மற்றும் பெருங்காய பொடி  சேர்த்து  5  நிமிடம் கழித்து   தோசை  மாவுடன் கலந்து . தோசைகளாக ஊற்றி எடுக்கவும் ,, சுவையான சத்து மிகுந்த அடை ரெடி

அழகு குறிப்புக்கள்

அறிய தகவல்கள்

சினிமா விமர்சனம்

இறைவன் என்பவன் யார்?

படிப்பினை கதைகள்

எனது கவிதை துளிகள்

காதல் ..
அறிந்தோ
அறியாமலோ ..
தெரிந்தோ
தெரியாமலோ ..
இதயங்களை
பரிமாறி கொள்ளும்
சுகமான உணர்வு தன்
காதல்!!!
காதல் வந்தால் கயவன் கூட
கவிஞன் ஆவான்..
ஆனால்
கலகம் தான். அதிகம் வருகிறது .
 

அறிந்து கொள்ளுங்கள்

சிந்தனைக்கு ... விருந்து

     நான் ஒரு வலை தளத்தில் கண்டது ... உங்களிடம் பகிர்ந்து  கொள்கிறேன்   

 
சாக்ரடீஸிடம் ஒருவர் ஓடோடி வந்து சொன்னார். "சாக்ரடீஸ் இதைக் கேள்விப்பட்டீர்களா?" 
வந்தவர் மற்றவர்களைப் பற்றிய புரளிகளிலும், வதந்திகளிலும் மிகுந்த ஈடுபாடுடையவர். சாக்ரடீஸ் அவரை மேலே பேச விடாமல் நிறுத்தி கேட்டார். "ஐயா நீங்கள் சொல்ல வரும் விஷயம் முற்றிலும் உண்மை என்று உங்களால் உறுதியாகச் சொல்ல முடியுமா?" 
அவர் பேச்சில் ஆரம்பித்தில் இருந்த வேகம் குறைந்தது. "இல்லை...." 
"நீங்கள் சொல்லப் போவது எனக்கோ சமூகத்திற்கோ மிகவும் உபயோகப்படக்கூடிய விஷயமா?" 
"அதில்லை..." 
"இதைத் தெரிந்து கொள்ளாவிட்டால் எனக்கோ சமூகத்திற்கோ ஏதேனும் நஷ்டம் உண்டா?" 
"இல்லை" 
"இதைச் சொல்வதில் உங்களுக்காவது நற்பயன் ஏற்படுமா?" 
"அப்படிச் சொல்ல முடியாது....." அவர் குரல் ஈனசுரத்தில் வந்தது. 

"ஐயா, எதை உண்மையென்று உறுதியாகக் கூற முடியாதோ, எதனால் நமக்கோ, சமூகத்திற்கோ பயனுமில்லையோ, எதை அறிந்து கொள்ளாததால் நமக்கு நஷ்டமுமில்லையோ அதைத் தெரிந்துகொள்ள நான் விரும்பவில்லை. குறுகிய வாழ்க்கையில் தெரிந்து கொள்ளவும் பேசவும் எத்தனையோ நல்ல விஷயங்கள் இருக்கின்றன. அதில் நம் கவனம் செலுத்தலாமே" என்று
சாக்ரடீஸ் சொல்ல, வந்தவர் அசடு வழிய அங்கிருந்து நகர்ந்தார். 
மற்றவர்களைப் பற்றிய விஷயங்கள் நம்மிடம் சொல்லப்படும் போது நம்மில் எத்தனை பேர் சாக்ரடீசின் மனோபாவத்தில் இருக்கிறோம்? கேட்கும் விஷயங்கள் உண்மையா என்பதை அறிய நாம் உண்மையில் முயல்கிறோமா? நமக்கோ மற்றவர்களுக்கோ பயன்படும் விஷயங்களாக அவை இருக்கின்றனவா என்று சல்லடையிட்டு தேர்ந்தெடுக்கிறோமா? 


மற்றவர்கள் விஷயங்களையும், அவர்களது பணத்தையும் நம்மில் பெரும்பாலானோர் நம்முடையதைப் போல் பயன்படுத்தத் தவறி விடுகிறோம். ஒருவித அலட்சியம் தானாக வந்து விடுகிறது. அதன் விளைவுகள் நம்மை பாதிப்பதில்லை என்பதும் அவர்களை எந்த அளவில் பாதிக்கிறது என்பதை நாம் உணரத் தவறி விடுகிறோம் என்பதுமே அதற்கு முக்கியக் காரணம் என்று சொல்லலாம். 
எங்கோ படித்த ஒரு குட்டிக்கதை நினைவுக்கு வருகிறது. 
ஒரு சீடன் மற்றவர்களைப் பற்றி உள்ளதும் இல்லாததுமாய் செய்திகளை மற்றவர்களிடம் சொல்லும் பழக்கம் உடையவானாய் இருந்தான். அதைக் கண்ட குரு அவனைக் கண்டித்தார். அவன் மன்னிப்பு கோரினான். ஆனாலும் அவனுடைய செய்கையின் தீமை அவன் மனதில் ஆழமாய் பதியவில்லை என்பதை அறிந்த குரு அவனிடம் ஒரு சிறு பஞ்சு மூட்டையைத் தந்து நகரத்தின் மையத்தில் உள்ள மைதானம் ஒன்றில் நின்று அதை சிறிது சிறிதாகப் பிய்த்து காற்றில் ஊதிப் பறக்க விட்டு வரும்படி சொன்னார். 
சீடன் வெகு சுலபமாக அதைச் செய்து விட்டு வந்தான். குரு சொன்னார். "சரி இப்போது போய் அதையெல்லாம் ஒன்று விடாமல் சேகரித்துக் கொண்டு வா". 
சீடன் திகைத்தான். இதென்ன ஆகிற காரியமா? "குருவே அந்த பஞ்சு காற்றில் இன்னேரம் எங்கெங்கு பறந்து போய் இருக்கிறதோ? அதை எப்படி மறுபடி சேகரித்து வர முடியும்?" 


"ஒரு மணி நேரத்திற்கு முன் பறக்க விட்ட பஞ்சுகளை உன்னால் சேகரித்து திரும்பக் கொண்டு வர முடியவில்லை. மற்றவர்களைப் பற்றி என்னென்னவோ சொல்லி வதந்திகளைப் பறக்க விட்டு வந்திருக்கிறாய். அவை யார் யார் வாயில் எப்படியெல்லாம் மீண்டும் திரிந்து என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தி இருக்கின்றனவோ. நீ மன்னிப்பு கேட்பதன் மூலம் அவற்றைத் திரும்பப் பெற முடியும் என்று நினைக்கிறாயா?" 
அப்போது தான் அந்த சீடனுக்குத் தன் செயலின் தீமை முழுவதுமாகப் புரிந்தது. கண்ணீர் மல்க வெட்கித் தலை குனிந்த சீடன் அன்றிலிருந்த அந்தப் பழக்கத்தை அடியோடு விட்டான். 
நம்முடைய தவறான செய்திகள் எத்தனை பேரிடம் சென்று எப்படியெல்லாம் திரிந்து மற்றவர் மனதில் என்னென்ன அபிப்பிராயங்களை உருவாக்கி சம்பந்தப்பட்டவர்களை எப்படியெல்லாம் பாதிக்கின்றன என்பதை நாம் அறிவோமா? விளையாட்டாய் பொழுது போக்காய் அடுத்தவர் பற்றி நாம் முழுவதுமாக அறியாததைப் பற்றி சொல்லும் போது எத்தனை பெரிய பாதகத்தைச் செய்கிறோம் என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்வது நல்லது. 

சிலர் நாங்கள் உள்ளதைத் தானே சொல்கிறோம், உண்மையைத் தானே சொல்கிறோம் என்று மற்றவரின் பலவீனமான உண்மைகளையும், நல்லதல்லாத உண்மைகளையும் சொல்லக்கூடும். அப்போதும் ஒரு கேள்வியை நம்முள் கேட்டுக் கொள்வது மிகவும் நல்லது. "நம்முடைய எல்லா உண்மைகளையும் நாம் வெளியில் சொல்கிறோமோ? வெளியே நம்மைப் பற்றி தெரிய வேண்டாம் என்று நினைக்கிற தர்மசங்கடமான உண்மைகள் நம் வாழ்வில் இல்லவே இல்லையா?" 
நாம் மனிதர்கள். நம்முள் மிக மேன்மையாவர்கள் கூட அந்த மேன்மையை எட்டுவதற்கு முன் எத்தனையோ தவறுகளை செய்து அதிலிருந்து கற்றிருக்கிறார்கள்; எத்தனையோ பலவீனங்களுடன் போராடிய பிறகே வென்றிருக்கிறார்கள். மற்றவர்களைப் பற்றி நாம் சொல்லும் தவறுகளை நாம் செய்யாதிருக்கக்கூடும். ஆனால் மற்ற எத்தனையோ தவறுகள் நாமும் செய்கிறோம். இப்படியிருக்கையில் நாம் அடுத்தவர் பற்றி வம்பு பேசுவது நியாயமா?
இனி யாராவது அடுத்தவர் பற்றி உங்களிடம் நல்லதல்லாதவற்றைச் சொல்ல வந்தால் பெரிய ஆர்வம் காண்பிக்காதீர்கள். சாக்ரடீஸ் போல சொல்ல முடியா விட்டாலும் நீங்கள் ஆர்வம் காண்பிக்காத போது மற்றவர்கள் உங்களிடம் சொல்வதைத் தானாகக் குறைத்துவிடுவார்கள். அதே போல் மற்றவர்களைப் பற்றி நல்லதல்லாதவற்றை நீங்கள் சொல்ல நினைக்கும் போது உதடுகளை இறுக்கிக் கொள்ளுங்கள். அந்த நேரத்தில் நீங்கள் செய்யும் மிக உத்தமமான காரியம் அதுவாகத் தான் இருக்க முடியும் 

 
 
இதை போல நம்மில் பலர் இருக்கிறோம் ... இனியாவது மாறலாம்....நாம் ..  இந்த சாக்ரடீஸ் -ன்  வார்த்தைக்காக
             


அந்த நண்பருக்கு நன்றி  !!!!

ஆன்மீகம் மற்றும் யோகா

                           யோகம் என்பது ஐந்து வகைப்படும். அவை கர்மயோகம், பக்தியோகம், ஞாநயோகம், ராஜயோகம், மந்திர யோகம் எனப்படும். இவற்றுக்கும் இங்கே நாம் பார்க்கப் போகும் யோகாசனப் பயிற்சிக்கும் வேறுபாடு உண்டு. மேற்சொன்ன யோகங்களை நாம் பயில இந்த யோகாசனப் பயிற்சியே அடிப்படையாகச் செயல்படுகிறது. யோகாசனப் பயிற்சிகளால் நம் மனம் ஒருமுகப் படும். மன அமைதியும், மனக்கட்டுப்பாடும் ஏற்படும். மனத்திற்கு மாபெரும் ஆற்றல் ஏற்படுகிறது. எத்தகைய செயலையும் எளிதில் செய்யவும். எதையும் தாங்கும் ஆற்றலும் ஏற்படுகிறது. உடல் நலம் பெறுகிறது. ஆன்மீகம் மேம்படுகிறது. இங்கே ஆன்மீகம் எனக் குறிப்பிடுவது அனைவரும் நினைப்பது போல் இறை வழிபாடு அல்ல. உண்மையான ஆன்மீகம் என்பது உள்முகத் தேடல். அத்தகைய தேடலுக்கு இது வழி காட்டுகிறது.   
                             உடலும் மனமும் சேர்ந்து இயங்க வேண்டும் இந்த யோகாசனப் பயிற்சிகளின் போது. அப்போது தான் மனம் ஒருமுகப் படும். இதற்கு தியானம் பெருமளவில் உதவுகிறது. பிராணாயாமம் செய்வதன் மூலம் மனதை ஒருமுகப் படுத்தி தியானத்தில் ஆழ்ந்து போகலாம்.
இவற்றுக்கெல்லாம் அடிப்படையாக நாம் முதலில் நம் உடலைப் பாதுகாக்க வேண்டும். நாம் உண்ணும் உணவின் மூலமே உடல் பாதிப்படையாமல் இருக்கும். உணவும் அளவோடு உண்ண வேண்டும். முறையான உணவாயும் இருக்க வேண்டும். உணவின் தரத்தையும் வளத்தையும் பொறுத்தே நம் உடல் வலிமை பெறுகிறது. சரியான உணவுப் பழக்கங்களைக் கடைப் பிடித்தல், அவ்வாறு கடைப்பிடிக்கச் செய்வது யோகாசனப் பயிற்சியாளரின் கடமையாகும். உணவும் மூன்று பிரிவாய்ப் பிரிக்கப் பட்டுள்ளது. அவை ராஜஸ உணவு, சத்வ உணவு, தாமஸ உணவு ஆகியவை ஆகும். இம்மூன்றில் சத்துவ உணவே சிறந்ததும் முதன்மையானதும் ஆகும். இவை எளிமையானதும் கூட. காய், கனிகள் நிறைந்த உணவே சத்துவ உணவு எனப்படும். இவற்றில் மிருகங்களின் மாமிசங்கள் சேராது. அதிகக் காரமோ, உப்போ, புளிப்போ இல்லாமல் மிதமான காரத்தோடும் உப்பு, புளிப்போடும் சாப்பிடவேண்டும். கூடியவரை காய்களை வேகவைத்து உண்ணவேண்டும்.

cristmas songs mp3

cristmas songs mp3

வியாழன், 18 நவம்பர், 2010

நெட்டில் கண்டவை***சிரிப்பு ***

 ரெட்டை கால் குதிரை ரேஸ்.... எப்படி இருக்கு ...?
என்ன  வடிவம் சொல்லுங்கள் ..

 முகம் தெரிகிறதா ...??
 அஹா... ஹஹா ஹ்ஹா அஹ்ஹா . சிக்கி டான்யா  ..சிகிட்டான் ....
 ரொம்ப அவசர பட்டா இப்படித்தான் ....
 ஓ  காரு ஓட்ட தெர்யுமா உன்னக்கு பார்த்து போ......
 இந்த விளையாட்டுக்கு நன் வரல ப்பா
 யப்பா எத்தனன பேரு யா ???
 ரொம்ப யோசிகறாரு போல ......      
 தூங்க வேற இடம் இல்ல போல ....
வயா கரா  வேலையா?

செவ்வாய், 16 நவம்பர், 2010

உங்கள் கண்கள் உங்களை ஏமாற்றும்

வட்டம் தெரிகிறதா (கருப்பு )

மவுசை ஸ்க்ரோல் செய்


எப்பா எத்தனை கண்கள் ..

புவிஈர்ப்பு விசை எடுபடவில்லை

நீரில் கடக்கிறார் இவர்

ஸ்க்ரோல் செயது பார்  

ரோஜா வின் வண்ணங்களும் அர்த்தங்களும்

பிங்க் ----என்னை நம்பு & முழுமையான மகிழ்ச்சி
வைட் ----தூய்மையான  காதல்நீ  எனக்குள் இருக்கிறாய்  
 எல்லோ -----காதல் குறைகிறது 
 
ரெட்---- ஐ லவ் யூ     
இப்படி பல உண்டு ...

( பிங்க்-)   என்னை நம்பு ..&..முழுமையான மகிழ்ச்சி
 (டீ-கலர் )  உன்னை எப்போதும் மறவேன் 

(வைட்) ---மேலும் அழமான   அன்பு
எல்லோ ) மேலும் அதிகரிக்கும்  அன்பு
(ரெட்) --ஐ லவ் யு   ---

இது  போல  இன்னும் பல உண்டு
காதலின் சின்னம்  சிகப்பு ரோஜா ....

என்னைப் பற்றி

எனது படம்
adudhabi, United Arab Emirates
நான் வசிப்பது uae இல் இந்த தளத்தில் கவிதை .கட்டுரை கதைகள் சேர்க்கலாம் என இருக்கிறேன் ,,, தங்களது ஆதரவினை எதிர் பார்த்து .....நகைசுவை துணுக்குகள் மற்றும் மருத்துவ குறிப்புகள் இடம் பெறும் . தொடர்ந்து வருகை தாருங்கள் .,, நன்றி .